Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

அரசுப் பேருந்து ஜப்தி

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாரதிராஜா(26). இவர், கடந்த 2015-ம் ஆண்டு மீன்சுருட்டி அருகே அரசு விரைவுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2018-ல் பாரதிராஜாவின் குடும்பத்துக்கு ரூ.14.72 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார்.

நஷ்டஈடு வழங்காததால், உத்தரவை நிறைவேற்றக்கோரி ராஜேந்திரன் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அரசு விரைவுப் பேருந்தை ஜப்தி செய்ய அக்.16-ல் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, சென்னையிலிருந்து நேற்று ஜெயங்கொண்டம் வந்த அரசு விரைவுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x