Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM

கூடங்குளம் அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுள்ள 2 அணுஉலைகளில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கடந்த மே 31-ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுபோல் 2-வது அணுஉலையில் வால்வு கோளாறு காரணமாக கடந்த ஜூலை 21-ம் தேதி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் மொத்தமாக 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 2-வது அணுஉலையில் ஏற்பட்ட கோளாறுகள் சரி செய்யப் பட்டு, மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. ஆகஸ்ட் 23-ம் தேதி முதலாவது உலையிலும் மின் உற்பத்தி தொடங்கியது.

இந்நிலையில் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 465 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. அதேநேரத்தில் 2-வது அணுஉலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x