Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
ஆரணியில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த கட்டிடத் தொழிலாளியின் குடும்பத்துக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மூலம் இழப்பீடு தொகை யாக ரூ.5 லட்சத்தை ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் கொசப்பாளையம் சின்னக்கடை வீதியை சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி கோவிந் தன். இவர், கடந்த ஆண்டு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
அவர், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந் ததால், இழப்பீடு வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நல வாரியத்தின் மூலம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை, அவரது குடும்ப வாரிசுகளான பச்சையம்மாள், மகன்கள் சரவணன், புருஷோத் ஆகியோரிடம் ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.
அப்போது அவர் கூறும்போது, “கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திட வேண்டும்.
www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலமாக பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்” என்றார். அப்போது தொழிலாளர் உதவி ஆணையர் செந்தில்குமரன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT