Published : 04 Nov 2020 03:14 AM
Last Updated : 04 Nov 2020 03:14 AM
தி.மலை நகர பூத் கமிட்டி உறுப்பி னர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப் பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தி.மலையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும் முன் னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப் புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோரால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. படித்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை முதல்வர் உருவாக்கி உள்ளார். அதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும். முதல்வர் பழனிசாமி தலைமை யில் மீண்டும் ஆட்சி அமைக்க, தி.மலை உட்பட மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி, மாவட்டத்தை அதிமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்” என்றார்.
நகர செயலாளர் செல்வம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் தொப்புளான், கலைப் பிரிவு மாவட்ட தலைவர் பழனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT