Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில்6 பேருந்துகளின் வழித்தட எண்கள் மாற்றம்

சென்னை: ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கடந்த செப். 1-ம் தேதி முதல் சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் மின்சார ரயில்களின் சேவை தொடங்காத நிலையில், தாம்பரம், கூடுவாஞ்சேரி, வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கின்றன. இருப்பினும், பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு சில வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, நிர்வாகத்தின் வசதிக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 6 பேருந்துகளின் வழித்தட எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 37ஜி (வள்ளலார்நகர் - பூந்தமல்லி)37 ஆகவும், 54ஏ (பூந்தமல்லி - திருநின்றவூர்) 597சி ஆகவும், 592ஏ (செங்குன்றம் - ஊத்துக்கோட்டை) 592 ஆகவும், எம்7 (தி.நகர் - திருவான்மியூர்) 3 ஆகவும், 7பி (பிராட்வே - கொரட்டூர்) 35 ஆகவும், ஜி70 (வடபழனி - கூடுவாஞ்சேரி ) 70 ஜி ஆகவும் நேற்று முதல் மாற்றப்பட்டு இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x