Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
மறைந்த திமுக தலைவர் கருணா நிதிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் சிலை அமைக்க அரசுமுடிவு எடுத்துள்ளது. வரும் டிசம்பருக்குள் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது. தற்போது ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி வந்த காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் "புதுச்சேரி, தமிழகத்தில் காங்கிரஸ்-திமுககூட்டணி தொடரும்" என்று கட்சிநிர்வாகிகளிடம் உறுதிப்படுத்தி யுள்ளார்.
இச்சூழலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டம் வரும் 12-ம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்துகிறது.
அதேபோல் மறைந்த திமுகதலைவர் கருணாநிதிக்கு சிலைஅமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி கடந்த 28ம் தேதிஇரவு முதல்முறையாக கூடியது.அதைத்தொடர்ந்து இக்கமிட்டியா னது சிலையை எங்கு நிறுவுவது, அதன் வடிவமைப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் சட்டப் பேரவை யில் முதல்வர் நாராயணசாமி அறையில் சிலை அமைப்புக்குழு நேற்று மீண்டும் கூடியது. தொடர்ந்து முதல்வர் நாரயாணசாமி, திமுகஅமைப்பாளர்கள் எஸ்பி சிவக்குமார், சிவா எம்எல்ஏ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர சலிம், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் உள்ளிட்டோர் சட்டப்பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர்.
இதுதொடர்பாக அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, "கருணாநிதி சிலை அமைக்க அண்ணா சாலை, காமராஜர் சிலை எதிரில்,நேரு சிலை மற்றும் சட்டப்பேரவை அருகில் என 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று சிலை அமைப்பு குழு கூடியது. இதில் சட்டமன்றம் எதிரில் வெளி நுழைவு வாயில் அமைந்துள்ள பகுதிக்கு எதிரில் பாரதி பூங்காவினுள் வரும் வகையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை அமைத்த தமிழகத்தை சேர்ந்த ஸ்தபதியிடமே சிலைஅமைப்பை கொடுக்க திட்டமிட்டுள் ளனர். 7.5 அடி உயரத்தில் சிலை அமைக்கவும் அதனை ஒரு பீடத்தின் மேல் நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர்மாதத்திற்குள் சிலையை அமைக்கும் திட்டமுள்ளது." என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவை எதிரேயுள்ள சிலைகள் அமைந்துள்ள இட அளவுகள் விவரங்களை அதிகாரிகள் அளவீடு செய்து குறித்துக்கொண்டனர்.
பேரவை எதிரேயுள்ள பாரதி பூங்காவில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT