Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
‘வீட்டுக்கு ஒருவருக்கு வேலை’என்று 2016 தேர்தல் அறிக்கை யில்கூறிவிட்டு நாலரை ஆண்டு களில் ஒருவருக்குக் கூட வேலை தரவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமி நாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசு, தனது தேர்தல் அறிக்கையில், ‘வீட்டுக்கு ஒருவருக்கு வேலைகொடுப்போம்’ என கூறியிருந்தது. ஆனால் கடந்த நான்கரைஆண்டுகளாக ஒரு இளைஞர் களுக்கு கூட அவர்கள் வேலை கொடுக்கவில்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைக்காக பதிவு செய்து தவித்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் சிலர் தடம் மாறி போகின்றனர்
இந்நிலையில், நாராயணசாமி தனியார் தொழிற்சாலைகள் மூலமாக 5 ஆயிரம் பேருக்கு வேலை தரப் போவதாக பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார், புதுவைதொழிற்பேட்டை தொழிற்சாலை கள் பல வெளியேறி, வேறு மாநிலங்களுக்குச் செல்ல இங்கு நடக்கும் அடாவடி வசூல் தான் காரணம். வேலைத்தரக்கோரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வரும் 6-ம் தேதி முற்றுகையிட்டு, வேலைவாய்ப்பு அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தஉள்ளோம். வாக்கு வங்கி அரசியலுக்காக புதுச்சேரியை தமிழகத்தோடு இணைப்பதாக முதல்வரும், எம்பி வைத்திலிங்கமும் பொய் சொல்கிறார்கள். பாஜக வை பொருத்தவரை எந்த மாநிலங்களையும் இணைப்பது கொள்கையே இல்லை, பல மாநிலங்களைப் பிரித்துள்ளோம், அரசின் செயலற்ற தன்மையை மூடி மறைப்பதற்காக புதிய புதிய பொய்களை முதல்வரும், எம்பியும் கூறி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT