Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து தடுப்புச் சுவர் கட்டியநிலையில், தற்போது அந்தச் சுவற்றில் துளையிட்டு மாநகராட்சிப் பணியாளர்களே குழாய் மூலம் கழிவுநீரை ஆற்றுக்குள் விடுவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வைகை அணையில் தண் ணீர் திறக்கும்போது மட்டும் வைகையாற்றில் ஓரிரு நாட்கள் தண்ணீர் ஓடும். மற்ற நாட்களில் பெரும்பாலும் நகர் பகுதி கழிவுநீர் தான் ஓடுகிறது.
இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கரையோரப் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்படுகிறது. மழைநீர், கழிவுநீர் கரையோரப் பகுதியில் கலப்பதைத் தடுக்க தடுப்புச் சுவர்களும் கட்டப் படுகிறது. இதற்காக மாநகராட்சி கோடிக்கணக்கான ரூபாய் செல விடுகிறது. ஆனால், தற்போது வைகை ஆற்றில் கழிவு நீரை வெளியேற்றுவது தொடங்கி உள்ளது. சந்தைப்பேட்டை அருகே கொண்டி தொழுவம் பகுதியில் மாநகராட்சிப் பணியாளர்களே, வைகை ஆற்றங்கரையோரம் கட் டிய தடுப்புச் சுவற்றில் துளையிட்டு குழாய் மூலம் அப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரை ஆற்றில் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: உயர்நீதிமன்றக் கிளையில் மாநகராட்சி நிர்வாகம், ஆற்றில் கழிவுநீரை கலக்கவிட மாட்டோம் என்று உறுதி கூறி யுள்ளது. ஆனால் தற்போது தடுப்புச் சுவரை உடைத்து குழாய் மூலம் ஆற்றில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். மாநக ராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன் மழைநீர் வீட்டுக்குள் புகு வதாகப் போராட்டம் நடத்தினர். மழைநீரை வெளியேற்றவே குழாயை ஆற்றுக்குள் அமைக் கிறோம் என்கின்றனர். இதேபோல, கள்ளுக்கடை சந்து, மரக்கடை சந்துப்பகுதியிலும் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது.
வைகை ஆற்றங்கரைப் பகுதி யில் எந்தெந்த இடங்களில் கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் கண்டறிந்து சரி செய்யாமல், தற்காலிகத் தீர்வாக கழிவுநீரை ஆற்றுக்குள் திருப்பி விட குழாய் அமைக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய சுவரை உடைத்து கழிவுநீரை வெளி யேற்றுவதை ஏற்க முடியாது என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணை யாளர் விசாகனிடம் கேட்டபோது, மழைநீரை ஆற்றுக்குள் விடலாம். அப்பகுதியே மழைநீர் ஆற்றுக்குள் வழிந்தோடும் நிலையில்தான் உள்ளது. தற்போது தடுப்புச் சுவர் கட்டியதால் வழிந்தோட வழியில்லாததால் குழாய் அமைக் கிறார்கள். கழிவுநீரை எக்காரணம் கொண்டும் ஆற்றுக்குள் விட மாட்டோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT