Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் குறைதீர் கூட்டம் நேரடியாக நடத்தப்படுவதில்லை. இதற்கு பதிலாக பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை 94454 61576 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அனுப்பலாம். ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசுவுக்கு நேற்று வாட்ஸ் அப் மூலம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 293 மனுக்கள் வரப் பெற்றிருந்தன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இணையதளம் வாயிலாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்து, உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 மனுக்களை இணையதளம் வழியாக பெற்றார். அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT