Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

மகனை கொலை செய்த தந்தை கைது

கரூர்: கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர் அருகேயுள்ள கள்ளிமரத்துபட்டியைச் சேர்ந்தவர் பாலு(70). இவரது மகன் சக்திவேல்(40). விவசாயம் மற்றும் ஃபிட்டர் வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியைப் பிரிந்த சக்திவேல், தன் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், சக்திவேல் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு பாலு தகவல் தெரிவித்தார். அங்கு சென்று போலீஸார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் சக்திவேல் குடிபோதையில் பாலுவை தாக்கியதும், இதில் ஆத்திரமடைந்த பாலு கட்டையால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் சக்திவேலை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் பாலுவை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x