Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநராக இருப்பவர் திருமால். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரின் பணியிட மாற்றம் தொடர்பாக, அண்மையில் இவரது செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகி ஒருவர், திருமாலை ஒருமையில் பேசி மிரட்டல் விடுப்பதுபோன்ற ஆடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநரை செல்போனில் மிரட்டியதாகக் கூறப்படும் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகியைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு நேற்று மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT