Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

நெல்லையப்பர் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் 3-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாகடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு நேரங்களிலும் அபிஷேகம், ஆராதனை மற்றும் திருக்கோயில் வளாகத்துக்குள் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி கள் மற்றும் இணையதளங்களில் கண்டுகளிக்கலாம் என்று, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும்10-ம் தேதி அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவமும், 11-ம் தேதி அதிகாலை 4 மணிக்குகோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x