Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM

ராணுவ வீரர் தற்கொலை

தென்காசி

சங்கரன்கோவில் லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் இசக்கிமுத்து (34). இவர் காஷ்மீரில் துணை ராணுவப் படையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பாம்புக்கோவில்சந்தை பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள தனது தம்பியின் திருமணத்துக்காக ஒரு மாதம் விடுமுறை எடுத்து இசக்கிமுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

வீட்டுக்கு செல்லாமல் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இசக்கிமுத்து, தான் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, சங்கரன்கோவிலில் உள்ள இசக்கிமுத்துவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இசக்கிமுத்துவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் விடுதிக்கு விரைந்து சென்றனர். மயங்கிய நிலையில் கிடந்த இசக்கிமுத்துவை மீட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கரன்கோவில் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, இசக்கிமுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x