Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

தமிழகத்தில் பாஜகவால் கால் பதிக்க முடியாது இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து

புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி விடுதலை நாள் கருத் தரங்கம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கருத் துரை வழங்கினர். திமுக எம்எல்ஏ சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு செயலா ளர் ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலா ளர் தேவ.பொழிலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்தா.பாண்டியன் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

ஜனநாயகத்தின் ஆணிவேரை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிசிதைப்பதுதான் ஆளுநர் கிரண்பேடி யின் முழு நேர வேலையாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தினமும் தொல்லை கொடுப்பார். இருந்தாலும் முதல்வர் நாராயணசாமி துணிச்சலோடு அவரை எதிர்த்து நின்று24 மணி நேரமும் போராடிக் கொண்டிருக்கிறார். ஜனநாயக அடிப் படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அமைச்சரவைக்கு என்ன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அவை அனைத்தையும் அவர்க ளுக்கு வழங்க வேண்டும். அதன் தனித்தன்மையை பறிக்கக்கூடாது. அவ்வாறு பறித்து வரும் இந்த ஆளுநரை பிரதமர் மோடி திரும்பப் பெற வேண்டும்.

காமராஜர் ஆட்சி எங்களாட்சி என்பார்கள், பாரதி எங்களுடைய கவிஞன் என்பார்கள். ஆனால் பாரதி சொன்ன ஒரு வரியைக்கூட நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் அனுமதிக்காது. இன்றைக்கு எல்லோரும் அப்பாக்களையும், பேரன்களையும் தத்தெடுப்பார்கள். ஆனால் தாத்தாக்களை தத்தெடுக் கின்ற வேலையில் பாஜக ஈடுபட் டுக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் யாத்திரை போகப்போகிறோம். புதிய கொள்கைகளை அறிவிக்கப் போகிறோம் என்று சொல்கின்றனர்.

அவர்கள் கரணமடித்தாலும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது. பாஜகவும், அவர்க ளோடு போட்டியிடுவோரும் தேர்த லுக்கு பின்னர் கட்டிப்பிடித்து அழுவார்கள்.

எனவே பாஜகவால் தமிழகத் தில் எந்த அணியையும் அமைத்து அடுத்த ஆட்சி எங்களுடையது என்று சொன்னாலும், அதையும் விலை கொடுத்து வாங்க நினைத்தாலும் பலிக்காது.

எங்களது கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங் கள் ஓரணியாக நிற்கிறோம். புதுச்சே ரியிலும் முழு உறுதியோடு நிற் போம்.

தமிழகத்தில் வேல் யாத்தி ரையை தடை செய்ய வேண்டிய தில்லை. அவர்கள் எந்த இடத்துக்கு போனாலும் அவர்களை வரவேற்க மக்கள் இருக்க மாட்டார்கள். அவர்கள் அந்த அவமானத்தை சகித்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x