Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவானது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பெருமிதம்

செய்யாறில் நடைபெற்ற விழாவில் பெண் ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன். அருகில், ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவானது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.1.06 கோடியில் 374 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறில் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். ரூ.1.06 கோடியில் 374 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, விபத்து மற்றும் பேரிடர் நிவாரணத் தொகை, மாதாந்திர உதவித் தொகை, உழவர் பாதுகாப்புத் திட்ட உதவித் தொகையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் விவசாயிகள் பாசன வசதி பெற்று பயனடைந் துள்ளனர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் அரசு துணையாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும் வகையில், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க அரசாணையை பிறப்பித்து முதல்வர் பழனிசாமி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், ஆளுநரும் ஒப்புதல் கொடுத்து உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 49,475 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 39,560 பேருக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தும் அதிமுக அரசுக்கு நீங்கள் உறு துணையாக இருக்க வேண்டும்” என்றார்.

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தூசி. கே.மோகன் (செய்யாறு), கோட்டாட்சியர் (பொறுப்பு) அரிதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x