Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
அருப்புகோட்டையை சேர்ந்த வேல்பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்துவிட்டு நேற்று அதிகாலை காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
திண்டிவனத்தை அடுத்த கன்னிகாபுரம் அருகே காலை 5 மணிக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அருப்புக்கோட்டை முருகேசன் மகன் கவுதம், முருகேசன் மனைவி சுப்புலட்சுமி(50) மற்றும் வேல்பாண்டியன் (37) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
முருகேசன், முத்து மனைவி பேச்சியம்மாள், சேகர் மனைவி ஜெயந்தி, வேல்பாண்டியன் மனைவி லட்சுமிபிரியா வேல்பாண்டியன் குழந்தைகள் கமலினி அருள்சுனை யாழினி ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயந்தி நேற்று முற்பகலும் மாலையில் பேச்சியம்மாளும் உயிரிழந்தனர். மயிலம் போலீஸார் லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT