Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

புதுச்சேரி விடுதலை நாள் ஆளுநர், முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி

புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரி இந்தோ-பிரெஞ்சு கலாச்சாரத்தின் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளது. பிரெஞ்சு பாரம்பரியத்தின் தனித்துவமான கூறுகளைக் கொண்டிருந்தாலும் அண்டை மாநிலங்களுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில்தமிழகத்தில் காரைக்கால், கேரளா வில் மாஹே மற்றும் ஆந்திராவில் ஏனாம் ஆகியவற்றுடன் ஒரு சிறிய இந்தியா போல விளங்குகிறது. விரைவில் கரோனா இல்லாத பிரதேசமாக மாறுவதற்கு நாம்அனைவரும் தீர்மானம் செய்துமற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி யாக விளங்குவோம்.

முதல்வர் நாராயணசாமி: இந்தபொன்னாள் புதுச்சேரி விடுதலைக் காக மட்டும் போராடிய நாள் அல்ல. புதுச்சேரி மாநிலத்தை இந்திய தேசத்துடன் இணைத்து, தேசிய நீரோட்டத்தில் நாம் கலக்கும் முடிவினையும் எடுத்த நாளாகும்.

நாம் இந்தியாவோடு இணைந்தபோது பிரதமராக இருந்த நேருகாலம்தொட்டு, மத்தியில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிஅரசுகள் ஆட்சியில் இருந்த போதெல்லாம் புதுச்சேரியின் உரிமைகள் மதிக்கப்பட்டன. பிரெஞ்சு ஜன்னலாக விளங்கிய புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்றுநம் தனித்தன்மைக்கும், உரிமை களுக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலரின் செயல்பாடுகள் உள்ளன.

நம் போராட்ட வரலாற்றினை அறியாதவர்களுக்கு இந்த நாள் ஒரு பாடமாக விளங்கும். உரிமைகளை விட்டுத்தர ஒரு நாளும் புதுச்சேரி மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், மாநில நலனுக்காக எத்தகுதியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையும் இந்தவிடுதலை நாள் எடுத்துக்காட் டுகிறது.

மாநில விடுதலைக்காக பாடு பட்ட தியாகிகள் அனைவருக்கும் என்னுடைய வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை கவுரவிக்கும் வகையில் தியாகிகளின் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப் பட்டுள்ளது. நான் முதல்வராக பொறுப்பேற்றவுடன் தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

போராடி நாம் பெற்ற சுதந்திரத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை நம்மை அடிமைகளாக ஆக்கத் துடிப்பவர்களுக்கு புரிய வைப்போம். புதுச்சேரி மக்கள் யாருக்கும் அஞ்சுபவர்கள் இல்லை. ஆனால் நாகரீகம் அறிந்தவர்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விடுதலை நாளில் புதுச்சேரியின் தனித்தன்மைக்காக எத்தகு தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x