Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மதுரை, ராமநாதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் காமராஜர், நிர்வாகிகள் ஜெய்ஹிந்த்புரம் கண்ணன், தல்லாகுளம் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனுமதி யின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.தெய்வேந்திரன் தலைமை வகித்தார்.
பொதுச்செயலாளர்கள் மேகநாதன், மணிகண்டன், மாவட்டச் செயலாளர்கள் ரஹ்மத்துல்லா, சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாநில பேச்சாளர் விஜயன், இலக்கிய அணியைச் சேர்ந்த முருகேசன், சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் கணேசமூர்த்தி, மகளிர் அணி நிர்வாகி ஜெயராணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT