Published : 01 Nov 2020 03:14 AM
Last Updated : 01 Nov 2020 03:14 AM

மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்காயத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

வாணியம்பாடி/செங்கம்

ஆலங்காயத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டத் துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சியில் அம்பேத்கர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட் டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருப் பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பிரபு தலைமை தாங்கினார். இதில், மாவட்டப் பொருளாளர் மகேஷ், ஆலங்காயம் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாதனுர் ஒன்றியத் தலைவர் சோலூர் மாணிக்கம் உள்ளிட் டோர் பங்கேற்று மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக முழக்க மிட்டனர்.

கையெழுத்து இயக்கம்

வேலூர் மத்திய புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலை வர் ஜோதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர் கிருஷ்ண மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் பேரணாம்பட்டு சுரேஷ் குமார், எஸ்.எம்.தேவராஜ், ஏ.கே.ஜெயபிரகாஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

செங்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் தி.மலை மாவட்டம் செங்கத்தில் நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களால் விவசாயம் மற்றும் விவசாயி களின் வாழ்வாரம் பாதிக்கும் என்பதால், 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடர் முழக் கமிடப்பட்டது.

தமிழ்நாடு டிவிஏஸ் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தமிழ் ஆரசு, வட்டாரத் தலைவர்கள் சுப்பரமணி, காந்தி, முன்னாள் மாவட்டச் செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மாரி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x