Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த தாண்டவன் (50), கடந்த 28-ம் தேதி அருப்புக்கோட்டை சாலையில் தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது இவரது பைக் மோதியது. படுகாயமடைந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்தவர் யார் என்பது குறித்து மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை நாகமலை புதுக்கோட் டையைச் சேர்ந்த சீனிவாசன் மகன் நவீன் (22). இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் ஊருக்கு அருகிலுள்ள வைகைக்கரை சாலையில் சென்றார். எதிரே வந்த மற்றொரு பைக் அவர் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே நவீன் உயிரிழந்தார். நாகமலைப் புதுக்கோட்டை போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை திருமங்கலம் அரு கிலுள்ள மதிப்பனூரைச் சேர்ந்த சரவணக்குமார் (40) தனது மகள் அக்சயா (5), தந்தை வெள்ளைச்சாமியுடன் பைக்கில் எம்.சுப்புலாபுரம்- பேரையூர் சாலையில் சென்றார். பேரையூர் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த வேனின் பின் பக்கத்தில் பைக் மோதியது. இதில் சரவணக்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வெள்ளைச்சாமி, மகள் அக்சயா ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டி. கல்லுப்பட்டி போலீஸார் விசாரிக் கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT