Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
திமுகவில் "எல்லோரும் நம்முடன்" என்ற திட்ட அடிப்படையில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்து மண்டலவாரியாக திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
அதற்கேற்ப மாவட்ட நிர்வாகங்களைப் பிரித்து புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாகவும் கருத்து கேட்டு வருகிறது.
அந்த வகையில் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த கடலூர், நாகை,தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலா ளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் சென்னையில் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது.
கிழக்கு மண்டலத்தில் முதலிடம்
இதுதொடர்பாக நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் பேசுகையில், "ஒவ்வொரு பூத்தையும் அளவுகோலாக நிர்ணயித்து அதன் அடிப்படையில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
பூத்திற்கு 150 உறுப்பினர்கள்
சராசரியாக ஒரு பூத்தில் 850 முதல் 1,000 வாக்குகள் உள்ளன. ஒரு பூத்திற்கு 150 உறுப்பினர்கள் என இலக்கு நிர்ணயித்து, அதன் அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கப்பட்டது" என அவர் தெரிவித்ததாக, கடலூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான வெ.கணேசன் கூறினார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT