Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
கீழ்பவானி பாசன திட்டத்தில் மூன்றாம் சுற்றில் நீர் நிறுத்தம் மற்றும் நீர் திறப்பு விவரங்களை முறைநீர் பாசன விவசாயிகள் சபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கூட்டமைப்பு இணைச்செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கீழ்பவானி முறைநீர் பாசனத்தில் மூன்றாவது சுற்றில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் யு8ஏ, யு8பி பாசன சபைக்குட்பட்ட மைல் 41/2 கவுந்தப்பாடி பிரிவு வாய்க்கால், எம்-6 பாசன சபை மைல் 60/4 திண்டல் பிரிவு வாய்க்காலிலும், 31-ம் தேதி மற்றும் நவம்பர் 1-ம் தேதிகளில் யு7 பாசன சபை மைல் 35/7 பிரிவு வாய்க்கால், யு9 பாசன சபை மைல் 48/6 பிரிவு வாய்க்கால் 56/2 நேரடி மதகுகள் மற்றும் எம்-5, எம்-6 சபை மைல் 56/3 ஈரோடு பிரிவு வாய்க்காலில் நீர் நிறுத்தப்படும்.
நவம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் மைல் 66/5 நேரடி மதகு, மைல் 67/10 பிரிவு வாய்க்கால், மைல் 70/1, 72/7, 73/5 நேரடி மதகு வாய்க்கால், சென்னசமுத்திரம் பிரிவு வாய்க்காலில் மைல் 0/0 முதல் மைல் 3/0 வரை நீர் நிறுத்தப்படும். நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் யு5, யு6 பாசன மைல் 33/1 கூகலூர் பிரிவு வாய்க்காலிலும், 6 மற்றும் 7-ம் தேதிகளில் யு7 பாசன சபை மைல் 34/7, மைல் 37/2, யு9 பாசன சபை மைல் 42/2, மைல் 50/5, யூ பாசனசபை மைல் 51/7 மேட்டுப்பாளையம் பிரிவு வாய்க்கால், யு3பி பாசனசபை மைல் 23/3 காசிபாளையம், அக்கரை கொடிவேரி பிரிவு வாய்க்கால்களில் நீர் நிறுத்தப்படும்.
முறைப்பாசனம் பற்றிய ஏதேனும் விவரங்கள் தேவையெனில் அந்தந்த பகுதி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பாசன சபையினரை தொடர்பு கொண்டு விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT