Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

ஒமைக்ரான் பாதித்த கர்நாடக மருத்துவர், குடும்பம் டிஸ்சார்ஜ் :

பெங்களூரு

நாட்டில் முதல் முறையாக கடந்த 2-ம் தேதி பெங்களூருவில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதான மருந்து நிறுவன ஊழியருக்கும், 46 வயதான மருத்துவருக்கும் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

மருத்துவருடன் தொடர்பில் இருந்த அவரது மனைவி, இரு மகள்கள், இரு நண்பர்கள் ஆகிய 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனினும் 5 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்நிலையில் மருத்துவர் உட்பட 6 பேரும் கடந்த 15 நாட்களாக பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதன் பலனாக 6 பேரும் பூரணமாக குணமடைந்து 6 பேரும் நேற்று வீடு திரும்பினர். அதேவேளையில் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x