Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

கேப்டன் வருண் சிங் உடல்நிலை விசாரித்த கர்நாடக ஆளுநர் :

பெங்களூரு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் உயிர் தப்பிய விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு கமாண்ட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் நேற்று கமாண்ட் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு தலைமை மருத்துவரை சந்தித்து கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலை குறித்தும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தனர். மேலும் வருண் சிங்கின் தந்தை கர்னல் கே.பி.சிங் (ஓய்வு) மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து நம்பிக்கை தெரிவித்தனர்.

முதல்வர் பசவராஜ் கூறும்போது, "கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x