Published : 10 Dec 2021 03:06 AM
Last Updated : 10 Dec 2021 03:06 AM

24 மணி நேரத்தில் 9,419 பேருக்கு கரோனா தொற்று :

புதுடெல்லி

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 9,419 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 1,009 அதிகமாகும். அவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 3 கோடியே 46 லட்சத்து 66,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 97,388 பேர் குண மடைந்துள்ளனர்.

மேலும், சிகிச்சை பெறுவோ ரின் எண்ணிக்கை 94,742 ஆகஉயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 159 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து 4 லட்சத்து 74,111 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைவோர் 98.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x