Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

தினசரி கரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கு கீழ் சரிவு : 558 நாட்களில் குறைவு

புதுடெல்லி

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்குக் கீழ் சரிந்துள்ளது. இது 558 நாட்களில் குறைவான அளவு ஆகும்.

மத்திய சுகாதார அமைச்சகம்நேற்று காலை நிலவரப்படி கரோனா தொடர்பான புள்ளிவிவ ரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 6,822 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 558 நாட்களில் பதிவான குறைவான அளவு ஆகும். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,48,383 ஆனது.

24 மணி நேரத்தில் 220 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,73,757 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 95,014 ஆக உள்ளது. இது கடந்த 554 நாட்களில் குறைவு ஆகும். தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து 11 நாட்களாக 10 ஆயிரத்துக்குக் கீழும் 163 நாட்களாக 50 ஆயிரத் துக்குக் கீழும் பதிவாகி வருகிறது.

கரோனா பாதித்தோரில் சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.27% ஆக குறைந்துள்ளது. கடந்த மார்ச் 2020-க்குப் பிறகு குறைவான அளவு ஆகும். குணமடைந்தோர் விகிதம் 98.36% ஆக பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x