Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

நாடு முழுவதும் 8,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

புதுடெல்லி

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,895 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 6,918 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில் தற்போது 99,155 பேர் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, பிஹார் மற்றும் கேரளாவில் கரோனாவால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை மறு கணக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன்படி, பிஹாரில் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோரில் 2,426 பேரின் எண்ணிக்கை விடுபட்டிருந்தது தெரிய வந்தது. கேரளாவில் 263 பேர் கரோனாவால் உயிரிழந் தவர்களின் பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்டனர். இவற்றுடன் சேர்த்து, உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 2,796-ஆக உயர்ந்தது.

இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,73,326 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 0.73 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 0.80 சதவீதமாகவும் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 127.61 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x