Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தை நோக்கி நாளை திட்டமிட்டிருந்த டிராக்டர் பேரணியை விவசாயிகள் தள்ளிவைத்துள்ளனர்.
விவசாயிகளின் நலனுக்காக 3 புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது. அதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
ஆனால், ‘‘வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவது மட்டும் அல்ல.விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ண யிக்க நாடாளுமன்றத்தில் சட்டம்இயற்ற வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் நடைபெறும்’’ என்று போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சம்யுக்த் கிஸான் மோர்ச்சா விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடக்கும் என்று ராகேஷ் டிகைத் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை 29-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுகுறித்து சம்யுக்த் கிஸான் மோர்ச்சா சங்கத்தினரின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின், விவசாய தலைவர் டாக்டர் தர்ஷன் பால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு உறுதி
திங்கட்கிழமை வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்றுமத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதனால், நாடாளுமன்றத்தை நோக்கிய எங்கள் பேரணியை தள்ளிவைத் திருக்கிறோம். மேலும், பிரதமர் மோடிக்குநாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம். அதில் பல கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளோம். போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போலீஸார் பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாய கழிவுகளை எரித்தது குற்றம் என்று கூறி விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். மின்சார மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
பிரதமர் மோடியின் பதிலுக்காக டிசம்பர் 4-ம் தேதி வரை காத்திருப்போம். அதன்பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம். இவ்வாறு டாக்டர் தர்ஷன் பால் கூறினார்.
வேளாண் அமைச்சர்
முன்னதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசு முடிவெடுத்த பிறகும், விவசாயிகள் போராட்டம் நடத்துவதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. விவசாயிகளின் மற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கமிட்டி அமைக்கப்படும். பயிர்க் கழிவுகளை எரித்த குற்றத்துக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகள், உயிரிழந்த விவசாயிகளின் குடும் பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவது ஆகிய பிரச்சினைகளில் தீர்வு காண வேண்டியது மாநில அரசு களின் அதிகாரத்துக்கு உட் பட்டது. இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தீர்வு காணும். எனவே, விவ சாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.
குறைந்தப்பட்ச ஆதார விலைவிஷயத்தில் மேலும் வெளிப்படையான தன்மையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப் பதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் தோமர் கூறினார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT