Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் நேற்று ‘மகா பஞ்சாயத்து’ என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத் பேசியதாவது:
புதிய வேளாண் சட்டங்கள் தவிரவும் விவசாயிகளின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. உண்மையான உணர்வுடன் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். விவசாயிகளுடன் பேச வேண்டும். அப்போதுதான் கிராமங்களுக்கு செல்ல முடியும். விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு, விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து, போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு உட்பட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். இவ்வாறு ராகேஷ் டிகைத் பேசினார்.
ராஷ்ட்ரீய கிசான் மஞ்ச் தலைவர் சேகர் தீக்ஷித் கூறுகையில், ‘‘உ.பி., பஞ்சாப் மற்றும் சில மாநிலங்களில் விரைவில் நடக்க உள்ள தேர்தலை மனதில் கொண்டுதான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்’’ என்றார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT