Published : 18 Nov 2021 03:07 AM
Last Updated : 18 Nov 2021 03:07 AM
ஜம்மு காஷ்மீரில் இருவேறு சம்பவங்களில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாம்பே, கோபால்போரா ஆகிய 2 இடங்களில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அப்பகுதிகளில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் இரு இடங்களிலும் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட் டனர்.
கோபால்போராவில் நடந்த என்கவுன்ட்டரில் எதிர்ப்பு முன்னணி (டிஆர்எப்) என்ற தீவிரவாத அமைப்பின் கமாண்டர் அஃபக் சிக்கந்தர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT