Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM
புதுடெல்லி: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும் சிறார் பாலியல் துஷ்பிரயோக காட்சிகளை இணையவெளியில் பகிர்ந்துகொண்டது மற்றும் பரப்பியது தொடர்பாகவும் 14 மாநிலங்களைச் சேர்ந்த 83 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த 83 பேருக்கு எதிராகவும் 23 தனித்தனி வழக்குகளை சிபிஐ கடந்த 14-ம் தேதி பதிவு செய்தது. இந்நிலையில் இவர்கள் தொடர்புடைய இடங்களில் சிபிஐ நேற்று அதிரடி சோதனை நடத்தியது.
டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 14 மாநிலங்களில் 76 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT