Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,229 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட 9.2 சதவீதம் குறைவாகும். கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 125 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 63,655 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 34,096 ஆக குறைந்துள்ளது. இது கடந்த 523 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். இவ்வாறு புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT