Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM
புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம் வருமாறு: cநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 266 நாட்களில் மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். கரோனா மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 77,113 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 61,389 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதம் 98.25 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச்சுக்கு பிறகு இது மிக அதிக அளவாகும். கடந்த 24 மணி நேரத்தில் 11,982 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 75,086 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 40,638 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது கடந்த 263 நாட்களில் மிகக்குறைவு ஆகும். நாட்டின் மொத்த நோயாளிகளில் 0.41 சதவீதம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இது, 2020 மார்ச்சுக்கு பிறகு மிகக் குறைவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT