Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஏப்ரலில் கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை காரணமாக மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை காலை 5 மணியுடன் தளர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த குதிரை பந்தயம் நடத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு குழுவின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பந்தயத்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று 5 பேர் உயிரிழந்தனர். பெங் களூருவில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 157 ஆக இருப் பதாக சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT