Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM
இந்த வீடியோ மங்களூருவில் வைரலானதை தொடர்ந்து, பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த வினய்குமார், புஞ்சலகட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “ஆன்மீக தலத்தில் செருப்பு அணிந்து சென்றதன் மூலம் இந்துக்களின் மத உணர்வுகளை இளைஞர்கள் அவமதித்துள்ளனர். இந்துக்களின் மனதை புண்படுத்திய 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார். பாஜக எம்எல்ஏ ராஜேஷ் நாயக்கும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இதையடுத்து மங்களூருவை சேர்ந்த புஷர் ரஹ்மான் (19), இஸ்மாயில் அர்ஹமாஸ் (20), முகமது தானிஷ் (19), முகமது ரஷாத் (19) ஆகிய 4 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT