Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்த பிறகு நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோஷம் வலுத் தது. ஒரு தரப்பினர், பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல்வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இதை யடுத்து, பாகிஸ்தான் என்ற நாடு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி உதயமானது.
இந்த நாளைதான், பாகிஸ்தான் மக்கள் தங்களின் சுதந்திரதினமாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 15-ம் தேதி இந்திய சுதந்திர தினமாக கொண்டாடப் படுகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ் கூறியிருப்பதாவது:
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட வலிகளையும், வடுக்களையும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அந்த சமயத்தில், லட்சக்கணக்கான நமது சகோதர – சகோதரிகள் புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அர்த்தமற்ற வெறுப்புணர்வு, பயங்கரவன்முறைக்கு ஆயிரக்கணக் கானோர் உயிரிழந்தனர்.
அவர்களின் கஷ்டங்களையும் தியாகங்களையும் நினைவு கூரும் விதமாக இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.
இதனிடையே, பிரிவினைக்கால வன்முறைச் சம்பவங்களில்இருந்து நாம் பாடம் கற்க வேண்டியதும் அவசியமாகிறது. சமூகப் பிரிவினை, நல்லிணக்கமின்மை ஆகிய நஞ்சுகளை ஒழிக்கவும் ஒருமைப்பாட்டை வலுவடையச் செய்யவும் இந்த தினம் நமக்கு நினைவூட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT