Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
இமாச்சலப் பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உரை நிகழ்த்திய போது எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி யில் ஈடுபட்டனர். எனினும் தனது உரையை முடித்துவிட்டு இருக்கைக்கு சென்ற பண்டாரு தத்தாத்ரேயாவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பின்னோக்கி இழுத்துள்ளனர்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி உட்பட 5 எம்எல்ஏக்களையும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழு வதும் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT