Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM
ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடும் 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஊழல் தடுப்பு சாம்பியன் விருது அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அரசு செயலர் டோனி பிளிங்கென் கூறியதாவது, “சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் இது தொடர்பான விவகாரங்களில் தீவிரமாக இயங்கும் தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசி யம். அதன்படி துணிச்சலுடன் ஊழல் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களை அங்கீகரிக்கும் விதமாக புதிய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது வழங்க திட்டமிட்டுள்ளது” என்றார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 தனிநபர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்தப் பட்டியலில் இந்திய சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜும் இடம்பெற்றுள்ளார்.
48 வயதாகும் அஞ்சலி பரத்வாஜ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திவரும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT