Published : 25 Feb 2021 03:15 AM
Last Updated : 25 Feb 2021 03:15 AM

கார் விபத்தில் டைகர் உட்ஸ் படுகாயம்

லாஸ் ஏஞ்சல்ஸ்

கோல்ஃப் விளையாட்டின் ஜாம்பவான் ஆன அமெரிக்க வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் படுகாயம் அடைந்தார்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணி அளவில் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் உட்ஸின் கார் பலத்த சேதம் அடைந்தது.

டைகர் உட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

டைகர் உட்ஸுக்கு கடந்த2014 முதல் 2017-ம் ஆண்டு காலக்கட்டத்தில் 4 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது விபத்தில் சிக்கியதால் 5-வது முறையாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். கோல்ப் விளையாட்டில் ஜாம்பவானாக திகழும் டைகர் உட்ஸ் கடைசியாக 2019-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவர்2008-ம் ஆண்டுக்கு பிறகு கைப்பற்றிய பட்டமாக அமைந்திருந்தது. இதுவரை டைகர் உட்ஸ் 82முறை அமெரிக்க பிஜிஏ பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x