Last Updated : 20 Dec, 2020 03:14 AM

1  

Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு ஆதரவாகவாக்குகள் பிரியும் வாய்ப்பு அதிகரிப்பு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நிதிஷ் கட்சி திட்டம்

புதுடெல்லி

மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு மம்தா ஆட்சியை வீழ்த்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. இவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஹைதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஒவைஸியும் போட்டியிடுகிறார்.

மேற்கு வங்கத்தில் மொத்த முள்ள 295-ல் 98 தொகுதிகளின் வெற்றி அங்குள்ள 27 சதவீத முஸ்லிம்களால் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, ஒவைஸியால், பிஹாரைப் போல் முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி வருகிறது. இந்த முறை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினரான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மேற்கு வங்கத்தில் குறைந்தது 75 இடங்களில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு அக்கட்சியின் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் வரும் 27-ல் கூடும் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x