Published : 05 Dec 2020 03:15 AM
Last Updated : 05 Dec 2020 03:15 AM
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மொத்தமுள்ள 150 வார்டுகளில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு 56 வார்டுகள் கிடைத்தன. பாஜக 48 வார்டுகளைக் கைப்பற்றி ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள 30 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. மொத்தமுள்ள 150 வார்டுகளுக்கு 1,122 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18,152 அரசு ஊழியர்கள் வாக்குகளை எண்ணினர். கரோனா வைரஸ் காரணமாக மின்னணு வாக்கு இயந்திரத்துக்கு பதில், வாக்கு சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்கு எண்ணிக்கையும், முடிவுகளும் தாமதமானது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக, ஆளும் கட்சியைவிட அதிக வாக்குகள் பெற்றன. இதனை தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக மற்றும் ஆளும் கட்சியான டிஆர்எஸ் இடையே தொடக்கத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது. சில வார்டுகளில் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கும், பாஜகவுக்கும் இழுபறி நீடித்தது.
மொத்தமுள்ள 150 வார்டுகளில், ஆளும் கட்சியான டிஆர்எஸ் 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 48 வார்டுகளைக் கைப்பற்றியது. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 44 வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
கடந்த மேயர் தேர்தலில் வெறும் 4 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு இணையாக வளர்ந்துள்ளது.
மாநகராட்சியின் 150 வார்டுகளிலும் டிஆர்எஸ், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 51 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது. தெலுங்குதேசம் போட்டியிடவில்லை.ஹைதராபாத் மாநகராட்சியில் 52 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 45 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இதில் 31 பேர் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள். ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 10, பாஜகவுக்கு 3, காங்கிரஸுக்கு ஓர் உறுப்பினர் உள்ளனர்.
மேயர் பதவியில் அமர ஒட்டுமொத்தமாக 98 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மாநகராட்சி தேர்தலில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் டிஆர்எஸ் கூட்டணி அமைக்கவில்லை. எனினும் நட்பு கட்சியான ஏஐஎம்ஐஎம் ஆதரவுடன் டிஆர்எஸ் மேயர் பதவியை கைப்பற்றும் என்று தெரிகிறது.
மொத்த வார்டுகள் 150கட்சிகள்20162020டிஆர்எஸ்9956பாஜக448ஏஐஎம்ஐஎம்4444காங்கிரஸ்22தெ.தேசம்1-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT