Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த 1992-ம் ஆண்டு முதலாக மலபார் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதில் கடந்த 2015-ம் ஆண்டு ஜப்பானும் இணைந்தது. இந்த பயிற்சியில் நிகழாண்டில் இருந்து ஆஸ்திரேலியாவும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அதன்படி, இந்த 4 நாடுகளும் பங்கேற்ற மலபார் கூட்டுக் கடற்படை பயிற்சி ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. கப்பலில் இருந்து மற்ற கப்பல்களையும், விமானங்களையும், தரையில் உள்ள இலக்குகளையும், நீர்மூழ்கி கப்பல்களையும் தாக்கி அழிக்கும் பயிற்சிகள் இதில் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா சார்பில் 5 போர்க் கப்பல்களும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் சார்பில் தலா ஒரு போர்க் கப்பல்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
பயிற்சியின் முதல் கட்டம் நேற்று நிறைவடைந்தது. அடுத்தகட்ட பயிற்சி அரபிக் கடலில் வரும் 17 முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT