Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM
ஒருதலைப்பட்சமான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், எல்லை ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியின் வைர விழா நேற்று தொடங்கியது. இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்தியா அமைதியை விரும்பும் நாடு. ஆனால் எல்லைகளில் அது சவால்களை சந்தித்து வருகிறது. கருத்து வேறுபாடுகள் சர்ச்சையாக மாறக்கூடாது என நாங்கள் கருதுகிறோம். கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் எல்லைகளில் அமைதியை பராமரிக்க நாங்கள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங் கள் மற்றும் நெறிமுறைகளை நாங்கள் மதித்து நடக்கிறோம்.
ஒருதலைப்பட்சமான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், எல்லை ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாது காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதில் எத்தகைய தியா கத்துக்கும் தயாராக உள்ளது” என்றார்.
லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவம் இடையிலான மோதலைத் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் வேளையில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
லடாக் எல்லையில் பதற்றத் தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் 7-வதுமுறையாக கடந்த மாதம் 12-ம்தேதி சந்தித்துப் பேசினர். இவர்கள் இடையே அடுத்த சுற்று பேச்சுவார்த்தை சுஷுல் பகுதியில் இன்று நடைபெற உள்ளது.
லே-யில் இருந்து செயல்படும் 14-வது படைப்பிரிவின் புதிய கமாண்டராக லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் பதவியேற்றுள்ள நிலையில், முதல் முறையாக அவரது தலைமையின் கீழ் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் பாகிஸ்தான் குறித்து ராஜ்நாத் சிங் பேசும் போது, “தீவிரவாதத்தை அரசின்கொள்கையாவே வைத்திருப்பதில் பாகிஸ்தான் பிடிவாதமாகஉள்ளது. பாகிஸ்தானின் பிற்போக்குத் தனமான கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் மட்டுமின்றி, முற்போக்கான மற்றும் ஒத்த கருத்து கொண்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் கணிசமான வெற்றியை நாம் அடைந்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT