Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளதால் மம்தா ஆட்சி முடிவுக்கு வரும் மேற்கு வங்கத்தில் அமித் ஷா உறுதி

பாங்குரா

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக கொல்கத்தா சென்றார்.

இந்நிலையில், பாங்குரா மாவட்டத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமித் ஷா, செய்தியாளர்களிடம் கூறும்போது,”மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக மக்கள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. அவரது ஆட்சியின் முடிவுக் காலம் தொடங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இம்மாநிலத்தில் நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவது உறுதி” என்றார்.

மேற்கு வங்கத்தில் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம்செலுத்தி வந்த பகுதியும் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியுமான ஜங்கல்மகால் பகுதியில் அமித் ஷா பேசும்போது, “இந்தப் பிராந்தியத்தில் பழங்குடியினருக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தர மம்தா அரசு மறுக்கிறது. பிரதமர்-சிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறுவதை மம்தா பானர்ஜி தடுக்கிறார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்துவதிலும் அவர் தடை ஏற்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை தடுப்பதன் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியும் என மம்தா கருதுகிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x