Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில்களின் எண் ணிக்கை இல்லாதது நீண்டகால பிரச்சினையாக உள்ளது. இதன் காரணமாக, ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் எடுத்தும், காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ரயில்களில் போதிய இருக்கைகள் இல்லாததால் உபரியாக இருக்கும் பயணிகள் இவ்வாறு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இருக்கை உறுதியான பயணிகள் யாரேனும் தங்கள்பயணத்தை ரத்து செய்யும்பட்சத்தில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். அப்படியும் இடம் கிடைக்கப்பெறாதவர்களின் பயணச்சீட்டுகள் தாமாகவே ரத்தாகிவிடும். எனினும், அதற்கான பயணக்கட்டணம் அவர்களுக்கு திரும்ப வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த 2019-20-ம் நிதியாண்டில் மட்டும் இதேபோல காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்று பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1.25 கோடி ஆகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ-யின் கீழ்தகவல் பெற்றதில் இந்த விவரம்தெரியவந்துள்ளது.
இப்பிரச்சினையை தீர்க்கதனியார் ரயில்களை அறிமுகப்படுத்துவது, தேவை அதிகம் இருக்கும் மார்க்கங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது போன்ற நடவடிக்கைகளில் ரயில்வே துறை ஈடுபட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT