Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
பிஹாரில் 2-ம் கட்டமாக 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 11 மாநிலங்களில் 56 பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
பிஹார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, 7-ம்தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, 71 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதி முடிவுற்றது. இந்நிலையில், 2-ம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. .
இந்தத் தேர்தலில். 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள் ஆவர். 3-ம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் களத்தில் குதித்துள்ளார். இதில் 2,85,50,285 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் மகனும் மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் பங்கு வகிக்கும் 4 அமைச்சர்கள் றஆகியோர் இன்றைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
மேலும் நாடு முழுவதும்11 மாநிலங்களில் காலியாக உள்ள 54 பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசம் (28), குஜராத் (8), உத்தரபிரதேசம் (7), ஒடிசா,நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்டில் தலா 2, சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணாவில் தலா 1 தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிஹாரில் 3-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10-ம் தேதி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT