Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
கேரள அரசு வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவதற் காக ‘லைஃப் மிஷன்' திட்டத்தை 2019-ல் அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் திருச்சூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் ரெட் கிரசண்ட் நிறுவனம்நிதியுதவி வழங்க முன்வந்தது.இந்த ஒப்பந்தம் ஐஏஎஸ் அதிகாரியும் முதல்வரின் முன்னாள்முதன்மை செயலாளருமான சிவசங்கர் பரிந்துரைக்கும் பில்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசங்கருக்கு அந்த பில்டர் லஞ்சம் வழங்கியதாக கேரளலஞ்சம், ஊழல் தடுப்பு பிரிவுகுற்றம் சாட்டியுள்ளது. லஞ்சம்வாங்கியதற்கு பதிலீடாக லைஃப்மிஷன் திட்டத்தில் 199 வீடுகள்என்பது 144 வீடுகளாகக் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மேலும் கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சந்தீப்நாயர், ஸ்வப்னா சுரேஷ், பி.சரித்ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்தவழக்கில் முதல்வர் பினராயிவிஜயனின் முதன்மை செயலாள ராக இருந்த சிவசங்கரனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத் துறை சிவசங்கரை சமீபத்தில் கைது செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
லைஃப் மிஷன் திட்டத்துக்கான ஒப்பந்தத்தின்போது ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகிய இருவரும் முக்கிய பதவிகளில் இருந்துள்ளனர். சந்தீப் நாயர்தான் பில்டரை சிவசங்கரிடம் அறிமுகப் படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. பில்டர் சுரேஷுக்கு சாதகமாக சிவசங்கர் உதவி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
லைஃப் மிஷன் திட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போவ தாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT