Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
காஷ்மீரில் இருந்து செயல் படும் சில அமைப்புகள் தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கடந்த 8 -ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.
காஷ்மீரில் உள்ள காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் காஷ்மீரில் மேலும் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் உள்ள அறக்கட்டளை அலுவலகம் ஒன்றிலும் சோதனை நடத்தப்பட்டது. ் இதில் முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற் றப்பட்டதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT