Published : 06 Aug 2021 03:19 AM
Last Updated : 06 Aug 2021 03:19 AM
வீடுகளுக்கே சென்று மருந்து, மாத் திரை வழங்குவதுடன் தேவையான சிகிச்சையும் அளிக்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மக்களை பரிசோதனை செய்து, உடல் பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் மட்டுமின்றி அனைத்து மருத்துவ சேவையும் அளிக்கும் வகையில் ‘மக் களைத் தேடி மருத்துவம்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்து கொடுக்கும் பணிகளையும் முதல்வர் கண்காணித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களிலும் இத்திட்டத்தை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க இருக்கும் செவிலியர், பிசியோதெர பிஸ்ட்களின் பயன்பாட்டுக்காக 3 புதிய வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கால்களை இழந்த 2 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள், சிறுநீரகங்கள் செயலிழந்த ஒரு நபருக்கு வயிற்றினுள் டயாலிசிஸ் செய்யப்படும் முறைக்கான மருத்துவ உபகரணங்கள், பெட்டமுகிலாளம் பகுதி மலைவாழ் மக்கள் பய னடையும் வகையில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்தி உள் ளிட்டவைகளை முதல்வர் வழங்கினார்.
ஓசூரில் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின்கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப் பூசி செலுத்தும் பணியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து முதல்வர் பேசியதாவது:
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இயலா மையில் உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்து களை களப்பணியாளர் கள் இல்லங்களுக்கே சென்று வழங்குவர். மேலும், நோய் ஆதரவு சேவைகள், பிசியோ தெரபி சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியா வசிய மருத்துவ சேவை களுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் உள்ளிட்ட ஒரு குடும்பத்துக்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண் காணிக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப் படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இத்திட்டத்துக்காக முதல்கட்டமாக ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலம் முழுவதும் இத்திட்டம் நிச்சய மாக விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் 30 லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவர்
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத் துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவிலேயே அது முழுமை பெறும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வரிடம், கெயில் நிறுவனம் விவசாய நிலங் களில் குழாய் பதிக்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், ‘‘விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனு மதிக்காது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தாரேஸ் அகமது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்), முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவன், தொழி லதிபரும், திமுக பிரமுகருமான கே.வி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்பி வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT