Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர அதிமுக - பாஜக இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 19-ம் தேதியுடன் நிறை வடைகிறது.
தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணியில் நேற்று முன்தினம் வரை கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறாமல் இருந்தது. நேற்று முன்தினம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கட்சியாக அதிமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
இதற்கிடையில், நேற்று மாலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத் திர ஓட்டலில், பாமகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப் பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தி லிங்கம், மூத்த அமைச்சர்கள், கொள்கை பரப்பு செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் பாமக சார்பில் அக்கட்சி யின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, வழக் கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவை பொதுத்தேர்தலை அதிமுகவும் பாமகவும் கூட்டணி அமைத்து சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் பாமகவுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமை யிலான கூட்டணியில் பாமகவுக்கு தமிழகத் தில் 23 சட்டப்பேரவை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் எண்ணிக்கைதான் தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இருதரப்பு நிர்வாகிகளும் சேர்ந்து எந்தெந்த மாவட்டத்தில் எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவெடுக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இணையும் என்பது தெரிவிக்கப் படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுக-பாமக இடையிலான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில், பாமக இளை ஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி, பாமக சார்பில், நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்ட கோப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, ‘‘பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட் டுள்ளன. இந்தத் தேர்தலில், எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். இந்த தேர்தலை பொறுத்தவரை வன்னியர் களுக்கு தனி இடஒதுக்கீட்டு என்ற எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றி யுள்ளதால், நாங்கள் போட்டியிடும் சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து பெற்றுள்ளோம். ஆனாலும், எங்கள் பலம் குறையாது. நிச்சயம் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் பழனி சாமி முதல்வராவார்’’ என்றார்.
முன்னதாக நேற்று காலை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனி சாமியை அவரது இல்லத்தில், பாஜக தேர் தல் பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்த னர். அதைத்தொடர்ந்து ஒருங்கிணைப் பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தையும் அவர்கள் சந்தித்து பேசினர்.
முன்னதாக தமிழகத்துக்கு அமித் ஷா வந்தபோதும், அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி வந்தபோதும் கூட்டணியை உறுதிப் படுத்தியுள்ள அதிமுக, இம்முறை பொறுப் பாளர்களுடன் தொகுதி எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், சந்திப் பின்போது விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும்படி இருவருக்கும் பாஜக பொறுப்பாளர்கள் அழைப்பு விடுத்ததாக வும் கூறப்படுகிறது.
இதுதவிர, தொகுதிப் பங்கீட்டு ஆலோ சனையில் 21 அல்லது 22 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்குவதாகவும் விழுப் புரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென் னைக்கு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சந்திக்கும் போது இதுதொடர் பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
விஜயகாந்துடன் சந்திப்பு
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேற்றிரவு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். இதில் தேமுதிகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. விரைவில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT